தொழிலாளர் சட்ட தொகுப்பின் நகலை எரிக்க முயன்றதால் பரபரப்பு
தொழிலாளர் சட்ட தொகுப்பின் நகலை எரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலூர்,
தொழிலாளர் சட்ட தொகுப்புகளையும், மின்சார சட்ட திருத்த மசோதா 2020-யும் மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை நிறுத்த வேண்டும். அனைத்து கட்டிட உடல் உழைப்பு தொழிலாளர்களுக்கும் நிவாரண தொகையாக மாதம் ரூ.7,500 வீதம் வழங்க வேண்டும். மத்திய அரசு பட்ஜெட்டில் உள்ள மக்கள் விரோத, தொழிலாளர் விரோத அம்சங்களை நீக்க வேண்டும் என்பன உள்ளி்ட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட மத்திய-மாநில தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் நேற்று பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்ட கவுன்சில் தலைவர் ரெங்கசாமி, சி.ஐ.டி.யு. தொழிற்சங்க மாவட்ட தலைவர் அகஸ்டின், ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்க மாவட்ட நிர்வாகி தியாகராஜன் ஆகியோர் தலைமை தாங்கினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியவாறு, தொழிலாளர் சட்ட தொகுப்பின் நகலை எரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அதனை தடுத்து நிறுத்தினர். இதனால் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.