திருப்பூரில் 2 கன்று குட்டிகளை பசு ஈன்றது
திருப்பூரில் 2 கன்று குட்டிகளை பசு ஈன்றது.
திருப்பூரில்,
திருப்பூர் மாவட்டம் தொட்டிய மண்ணரை பகுதியை சேர்ந்தவர் பாப்பநாயக்கர் (வயது 75). இவரது மனைவி தங்கமனி (67). இவர்கள் தொட்டிய மண்ணரை பகுதியில் 3 ஏக்கர் நிலம் வைத்து விவசாயம் செய்து வருகின்றனர். இவர்கள் பசு மாடுகள், எருமை மாடுகள் மற்றும் ஆட்டுகுட்டிகள் வளர்த்து வருகின்றனர்.
2 கறவை கன்று குட்டிகளை
இந்த நிலையில் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு பசுமாடு வாங்கி லட்சுமி என்று பெயரிட்டு வளர்த்து வருகின்றனர்.
கடந்த இரண்டு முறையும் கறவை கன்றை ஈன்ற லட்சுமி, சினையாக இருந்தது.
நேற்று காலை லட்சுமி பசு, 2 கறவை கன்று குட்டிகளை ஈன்றது. ஒரு பிரசவத்தில் 2 கன்று குட்டிகளை ஈன்றுள்ளது அப்பகுதியில் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. அப்பகுதி மக்கள் ஆச்சரியமாக வந்து பசுவையும், கன்றுக்குட்டிகளையும் பார்த்து சென்றனர்.