பாளையங்கோட்டை அருகே குளத்தில் மூழ்கி வாலிபர் சாவு

பாளையங்கோட்டை அருகே குளத்தில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-02-03 21:30 GMT
கோப்புப்படம்
நெல்லை,

பாளையங்கோட்டை அருகே உள்ள சிவந்திபட்டி கார்மேகனார் தெருவை சேர்ந்தவர் சுடலைமுத்து. இவருடைய மகன் அரிராமச்சந்திரன் (வயது 20). இவர் அந்த பகுதியில் இட்டேரி ரோட்டில் உள்ள ஒரு குளத்துக்கு நண்பர்களுடன் குளிக்கச்சென்றார். அப்போது நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி அரிராமச்சந்திரன் பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் அங்கு விரைந்து சென்று, அவரது உடலை மீட்டனர். பின்னர் உடல் பிரேத பரிசோதனைக்கு ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து சிவந்திபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்