கோவையில் கள்ளத்தொடர்பை மனைவி கண்டித்ததால் சயனைடு தின்று தொழிலாளி தற்கொலை

கோவையில் கள்ளத்தொடர்பை மனைவி கண்டித்ததால் சயனைடு தின்று தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2021-02-03 17:10 GMT
கோவை

கோவையில் கள்ளத்தொடர்பை மனைவி கண்டித்ததால் சயனைடு தின்று தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.

நகை தொழிலாளி

கோவை கெம்பட்டிகாலனி உப்புமண்டி பகுதியை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (வயது 42). தங்கநகை தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் ஆனந்தகுமாருக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ஒரு இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.

நாளடைவில் இது கள்ளத்தொடர்பாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர். இந்த கள்ளத்தொடர்பு விவகாரம் ஆனந்தகுமாரின் மனைவிக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர் தனது கணவரை கண்டித்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

சயனைடு தின்று தற்கொலை

சம்பவத்தன்று ஆனந்தகுமார் கள்ளக்காதலி வீட்டுக்கு சென்று உல்லாசமாக இருந்துவிட்டு குடிபோதையில் வீட்டுக்கு வந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவரது மனைவி கண்டித்ததால் மீண்டும் கணவன்-மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இதில், மனமுடைந்த ஆனந்தகுமார், வாழ்க்கையில் விரக்தியடைந்து வீட்டில் இருந்த சயனைடை தின்று வாயில் நுரை தள்ளியபடி மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவருடைய மனைவி உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். 

ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே  அவர் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து பெரியகடை வீதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்