அரக்கோணம் அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு

அரக்கோணம் அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு செய்தார்.

Update: 2021-02-03 16:07 GMT
அரக்கோணம்

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ்  அரக்கோணம் அரசு பொது மருத்துவமனையில் ஆய்வு செய்தார்.

 அப்போது அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் சிகிச்சை, மருந்துகள் வழங்குதல் மற்றும் சுகாதார பணிகள் குறித்து கேட்டறிந்தார். 

அப்போது மருத்துவ அலுவலர் நிவேதிதா உடனிருந்தார்.

பின்னர் அரக்கோணம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அலுவலக கோப்புகளை பார்வையிட்ட அவர் அங்கு புதிதாக கட்டப்பட்டு வரும் அலுவலக கட்டுமான பணிகளையும் ஆய்வு செய்தார். 

தொடர்ந்து அரக்கோணம் ரெயில் நிலையத்திற்குள் பஸ்கள் வந்து செல்வதற்கான இடத்தையும் பார்வையிட்டார். 

அப்போது அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்