தூக்குப்போட்டு புதுப்பெண் தற்கொலை

காவேரிப்பாக்கம் அருகே புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-01-31 17:01 GMT
காவேரிப்பாக்கம்

காவேரிப்பாக்கம் அடுத்த கட்டளை கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன் (வயது 29). ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டுக் கோட்டையில் உள்ள தனியார் தொழிற் சாலையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பவித்ரா (24). இவர்களுக்கு திருமணமாகி 6 மாதம் ஆகிறது. 

இந்த நிலையில் பொங்கல் பண்டிகைக்கு பவித்ரா தக்கோலம் அடுத்த நகரிகுப்பத்தில் உள்ள தாய் வீடடுக்கு சென்றுவிட்டு கடந்த 27-ந்் தேதி கணவர் வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் பவித்ரா மனஉளைச்சலுடன் தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காவேரிப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  

தகவலின்பேரில் இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பவித்ராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து பவித்ராவின் தாயார் சுசிலா காவேரிப்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

 திருமணமான 6 மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதால், இதுகுறித்து அரக்கோணம் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்