ஓசூர் நிதி நிறுவனத்தில் 25 கிலோ நகை கொள்ளை:கைதான 7 கொள்ளையர்களிடம் போலீசார் தீவிர விசாரணை

ஓசூர் நிதி நிறுவனத்தில் 25 கிலோ நகை கொள்ளை: கைதான 7 கொள்ளையர்களிடம் போலீசார் தீவிர விசாரணை ஓசூர் அட்கோ போலீஸ் நிலையத்தை சுற்றி 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

Update: 2021-01-31 05:55 GMT
ஓசூர்:

ஓசூரில் தனியார் நிதி நிறுவனத்தில் 25 கிேலா நகைகளை துப்பாக்கி முனையில் கொள்ளையடித்து சென்ற வடமாநிலத்தை சேர்ந்த 7 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களை போலீசார் 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொள்ளையர்கள் 7 பேரும் ஓசூர் அட்கோ போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர். 

கொள்ளையர்களிடம் கிருஷ்ணகிரி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல், ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி ஆகியோர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த கொள்ளையர்களுக்கு பல்வேறு மாநிலங்களில் நடந்த கொள்ளை சம்பவங்களில் தொடர்பு இருப்பதால், இவர்கள் வைக்கப்பட்டுள்ள அட்கோ போலீஸ் நிலையத்தை சுற்றி 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதியில் 100 அடி தூரத்திற்கு சர்வீஸ் சாலையில் தடுப்பு கம்பிகள் வைக்கப்பட்டு அடைக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்