அரூர் பகுதியில் மது, சாராயம், கள் விற்ற 19 பேர் கைது
மது, சாராயம், கள் விற்ற 19 பேர் கைது
அரூர்:
அரூர் பகுதியில் மது, சாராயம், கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமளவள்ளி தலைமையில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது பையர்நாய்க்கன்பட்டி பகுதியை சேர்ந்த அர்ஜூனன் (வயது 30), அரூரில் முருகன், ஆவலூரில் நடேசன், கணேசன், சுப்ரமணி, மாணிக்கம், சின்னத்தம்பி, பில்பருத்தியில் பானுமதி, இந்திராணி, மாது, பே.தாதம்பட்டியில் சுபாஷ், பெரியாம்பட்டியில் பெருமாள், கோபிநாதம்பட்டியில் கருப்பசாமி, திருப்பதி, பெருமாள், முத்து, மாது திப்பிரெட்டிஅள்ளியில் ஜானகி, பொம்மிடியில் கண்ணகி ஆகிய 19 பேரும் மது, சாராயம், கள் விற்றதாக கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 10 லிட்டர் சாராயம், 200 லிட்டர் ஊறல், 27 லிட்டர் கள், 322 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.