நெல்லை, தென்காசியில் போக்குவரத்து தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம்

நெல்லை, தென்காசியில் போக்குவரத்து தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-01-31 01:48 GMT
நெல்லை:
நெல்லை, தென்காசியில் போக்குவரத்து தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உண்ணாவிரத போராட்டம் 

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வலியுறுத்தி அனைத்து பணிமனைகள் முன்பு நேற்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. அதன்படி நெல்லை வண்ணார்பேட்டை அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

தொ.மு.ச. அமைப்பு செயலாளர் தர்மன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட பொருளாளர் பெருமாள் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார். ஏ.ஐ.டி.யு.சி. மண்டல பொது செயலாளர் உலகநாதன், எச்.எம்.எஸ். பேரவை தலைவர் சுப்பிரமணியன், டி.டி.எஸ். பேரவை துணைத் தலைவர் சந்தானம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தென்காசி

தென்காசி அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு நடந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு மத்திய சங்க துணை தலைவர் மணிராஜ் தலைமை தாங்கினார். தி.மு.க. கலை இலக்கிய அணி மாவட்ட செயலாளர் திவான் ஒலி, நிர்வாகிகள் வெள்ளப்பாண்டி, இக்னேஷியஸ், மணிகண்டன், மகேஷ்குமார், சிவசைலப்பன், செல்லப்பா, கண்ணன், ஜோசப்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று அனைத்து அரசு போக்குவரத்து கழக பணிமனைகளின் முன்பும் தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்