மனைபிரிவுகளை வரன்முறைப்படுத்த கால அவகாசம் நீட்டிப்பு

மனைபிரிவுகளை வரன்முறைப்படுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது

Update: 2021-01-30 21:44 GMT
அரசாணை எண்.78, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறைநாள் 2017-ம் ஆண்டு மே மாதம் 4-ந் தேதியின் படி இணையதளத்தில் விண்ணப்பிக்க 2017-ம் ஆண்டு நவம்பர் 3-ந் தேதி வரை 6 மாதங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அரசாணை எண்கள் 172, 55 மற்றும் 21-ன்படி கால அவகாசம் வழங்கி ஆணை வெளியிடப்பட்டது. ஏற்கனவே வழங்கப்பட்ட அரசாணைகளின்படி திருச்சி மாவட்டத்தில் தங்களுடைய மனை மற்றும் மனைபிரிவுகளை வரன்முறைப்படுத்திட விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு அளிக்கும் பொருட்டு மேற்கூறிய அரசாணைகளின் விதிகளுக்குட்பட்டு, எவ்வித மாற்றமும் இல்லாமல் புதிய அரசாணை எண்.16, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சிதுறை நாள் 25.1.2021-ல் www.tn.gbv.in/tcaP இணையதளத்தில் விண்ணப்பம் செய்ய வருகிற 28-ந் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என்று திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்