காந்தி அஸ்தி மண்டபத்தில் மாணவிகள் மலர்தூவி அஞ்சலி
காந்தி அஸ்தி மண்டபத்தில் மாணவிகள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்
அண்ணல் காந்தியடிகள் 1948-ம் ஆண்டு ஜனவரி 30-ந் தேதி டெல்லியில் கோட்சேவால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது நினைவு நாள் தியாகிகள் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி திருச்சி புத்தூர் அரசு ஆஸ்பத்திரி அருகே உள்ள மகாத்மா காந்தியின் அஸ்தி மண்டபத்தில் பள்ளி மாணவிகள் எம்மதமும் சம்மதம் என்பதை வலியுறுத்தும் விதமாக பகவத் கீதை, பைபிள் மற்றும் குரான் ஆகியவற்றை வாசித்து மும்மத பிரார்த்தனை மேற்கொண்டனர். தொடர்ந்து பள்ளி மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள், பொதுமக்கள் அஸ்தி மண்டபத்தில் மலர் வளையம் வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தி வணங்கினர்.