கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத ஒதுக்கீடு கேட்டு பா.ம.க.வினர் ஊர்வலம்

கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத ஒதுக்கீடு கேட்டு திருச்சியில் பா.ம.க.வினர் ஊர்வலம் சென்றனர்.

Update: 2021-01-29 23:36 GMT
வன்னியர் சமுதாயத்திற்கு கல்வி, வேலைவாய்ப்பில் 20 சதவீதம் தனி இடஒதுக்கீடு வழங்கக்கோரி திருச்சி மாவட்ட பா.ம.க.வினர் மற்றும் வன்னியர் சங்கத்தினர் இணைந்து ஏற்கனவே 5 கட்டமாக மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் நேற்று 6-வது கட்டமாக ஒருங்கிணைந்த பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் திருச்சியில் ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. திருச்சி கலெக்டர் அலுவலக பிரதான சாலையில் உள்ள ராஜா காலனியில் இருந்து கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலத்திற்கு மாவட்ட செயலாளர் திலீப்குமார் தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச்செயலாளர்கள் பிரின்ஸ் (கிழக்கு), லெட்சுமணகுமார் (மேற்கு) ஆகியோர் முன்னிலை வகித்தினர். ஊர்வலம் திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே முடிவடைந்ததும், அங்கு ஆர்ப்பாட்டம் நடந்தது. அதனைத் தொடர்ந்து முக்கிய நிர்வாகிகள் மட்டும் சென்று மாவட்ட கலெக்டர் சிவராசுவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். முன்னதாக பா.ம.க.வினர் ஊர்வலம் காரணாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்