ரஜினிகாந்த் பூரண குணமடைய வேண்டி காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் சவுந்தர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம்

ரஜினிகாந்த் பூரண குணமடைய வேண்டி காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் சவுந்தர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்தார்.

Update: 2021-01-29 18:45 GMT
காஞ்சீபுரம்,

நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலையை கவனித்து கொள்ள டாக்டர்கள் கூறிய அறிவுரையின் பேரில் தான் அரசியலில் ஈடுபட போவதில்லை என்று திட்டவட்டமாக கூறி விட்டார்.

இந்த நிலையில் அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் தனது கணவருடன் உலக புகழ் பெற்ற காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். தனது தந்தையின் உடல்நிலை பூரண குணமடையவும், வரும் காலங்களில் அவர் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெற வேண்டும் எனவும் சிறப்பு பூஜை செய்தார்.

அவருக்கு கோவில் அர்ச்சகர் நடனம் சாஸ்திரிகள் பிரசாதங்களை வழங்கினார்.

மேலும் செய்திகள்