தனியார் மருத்துவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வரவில்லை-மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர்
தனியார் மருத்துவர்கள் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள முன்வரவில்லை என மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் கூறினார்.
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டத்தில் தனியார் மருத்துவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வரவில்லை
திருவண்ணாமலை மாவட்டத்தில் தனியார் மருத்துவர்கள் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள முன்வரவில்லை என மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் கூறினார்.
இது தொடர்பாக மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் கண்ணகி ஆரணியில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வரவில்லை
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 75 சதவீத மருத்துவர்கள் மற்றும் அனைத்துப் பணியாளர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு விட்டது. அதேபோல் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைகளில் 443 மருத்துவர்கள், களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. சுகாதாரத் துறையில் பணியாற்றும் 1,500-க்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் தனியார் மருத்துவர்களும், அவர்களிடம் பணியாற்றுபவர்களும் இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வரவில்லை. மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றை தடுக்க, அவர்கள் முன்னுதாரணமாக இருந்து தாங்களே முன்வந்து தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
கர்ப்பிணிகள் போட்டுக்கொள்ளக்கூடாது
ஏற்கனவே தடுப்பூசி போட்டவர்கள் 28 நாட்கள் கழித்து மீண்டும் 2-வது முறையாக தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும். கர்ப்பிணிகள், 18 வயதுக்குட்பட்டோர் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளக்கூடாது. மேலும் 60 வயதுக்கு மேற்பட்டோர், சர்க்கரை நோய், இருதய நோய் ஆகிய பிரச்சினை உள்ளவர்கள் தடுப்பூசியைப் போட வேண்டாம்.
எந்தப் பிரச்சினையும் இல்லாதவர்கள் மட்டும் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். அடுத்த கட்டமாக போலீசார், நகராட்சி சுகாதாரப் பிரிவு உள்ளிட்ட பொறுப்பாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டப்பிறகு தான் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தடுப்பூசி வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.