தொழில் வளாக கழிவுகளால் நிலத்தடி நீர் மாசடைவதைத் தடுக்க வேண்டும்

ராணிப்பேட்டை சிப்காட் தொழில் வளாகத்திலிருந்து ஏற்படும் கழிவுகளால் புளியங்கண்ணு, நவ்லாக் பஞ்சாயத்துகளில் நிலத்தடி நீர் மாசு அடைகிறது. இதனை தடுக்க வேண்டும்,

Update: 2021-01-29 14:23 GMT
ராணிப்பேட்டை

புளியங்கண்ணு‌ நவ்லாக்‌ பகுதியில் தொழில் வளாக கழிவுகளால் நிலத்தடி நீர் மாசடைவதைத் தடுக்க வேண்டும்

விவசாயிகள் கோரிக்கை

ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமை தாங்கினார். 

கூட்டத்தில் வேளாண்மை துறை, வேளாண்மை பொறியியல் துறை, வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை, தோட்டக்கலை துறை, கூட்டுறவு துறை, கால்நடை பராமரிப்பு துறை மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த உயர் அலுவலர்கள் தங்கள் துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து விவசாயிகள் பல்வேறு குறைபாடுகள் மற்றும் கோரிக்கைகள்
குறித்து பேசினர். 

பயிர் காப்பீடு தொகை விரைந்து கிடைத்திட வழிவகைபயிர் செயய வேண்டும். காப்பீடு தொகை விரைந்து கிடைத்திட வழிவகை செய்திட வேண்டும், நிவர், புெரவி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும், காட்டு பன்றிகளால் ஏற்படும் பயிர் சேதத்தை கட்டுப்படுத்த வனத்துறையினர் மூலம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், தக்கோலம், பனப்பாக்கம் ஆகிய இடங்களில் விவசாயத்திற்கு சீரான மின்சாரம் வழங்க வேண்டும், ராணிப்பேட்டை சிப்காட் தொழில் வளாகத்திலிருந்து ஏற்படும் கழிவுகளால் புளியங்கண்ணு, நவ்லாக் பஞ்சாயத்துகளில் நிலத்தடி நீர் மாசு அடைகிறது. 

இதனை தடுக்க வேண்டும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் நஷ்ட ஈடு விரைந்து வழங்கிட வேண்டும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைத்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தினர்.

மேலும் செய்திகள்