திருச்சியில் அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
திருச்சியில் அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி,
ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மற்றும் பல் மருத்துவக்கல்லூரியை தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலை கழகத்துடன் இணைக்க வேண்டும். பெருந்துறைஅரசு மருத்துவக்கல்லூரியில் இதர அரசு மருத்துவக்கல்லூரிகளுக்கு இணையாக கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக்கல்லூரி மாணவ- மாணவிகள் நேற்று கல்லூரி வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு மருத்துவக்கல்லூரி மாணவர் சங்க இணை செயலாளர் கணபதி சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். கோரிக்கைகளை விளக்கி யோகப்பிரியா உள்பட நிர்வாகிகள் பேசினார்கள்.