ஜலகண்டாபுரம் அருகே நெசவு தொழிலாளி தற்கொலை

ஜலகண்டாபுரம் அருகே உள்ள காட்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம்.

Update: 2021-01-28 21:18 GMT
ஜலகண்டாபுரம் அருகே உள்ள காட்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 36). நெசவுத் தொழிலாளி. இவர் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்து, மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததால், அவர் கோபித்துக்கொண்டு, குழந்தைகளை அழைத்து கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் வெங்கடாசலம், மனைவியை குடும்பம் நடத்த அழைத்துள்ளார். ஆனால் அவரது மனைவி மறுத்து விட்டதால் அவர் மனமுடைந்து காணப்பட்டார். இதனால் வெங்கடாசலம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஜலகண்டாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
========

மேலும் செய்திகள்