சேலத்தில் இருந்து பெங்களூருவுக்கு பழுதடைந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைப்பு

சேலத்தில் இருந்து பெங்களூருவுக்கு பழுதடைந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

Update: 2021-01-28 20:30 GMT
சரிபார்ப்பு பணிகள்
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக தரைதளத்தில் உள்ள இருப்பு அறையில் தேர்லுக்கு பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு எந்திரங்களை முதல்நிலை சரிபார்ப்பு பணிகள் கடந்த மாதம் 2-ந் தேதி முதல் கடந்த 25-ந் தேதி வரை மேற்கொள்ளப்பட்டது.

இந்தநிலையில், முதல்நிலை சரிபார்ப்பு பணிகளின்போது, கண்டறியப்பட்ட பழுதடைந்த வாக்குப்பதிவு எந்திரங்களை நேற்று மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) தியாகராஜன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் பெங்களூரு பாரத் மின்னணு நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. 
கட்டுப்பாட்டு கருவிகள்
சேலம் மாவட்டத்தில் 7 ஆயிரத்து 492 வாக்குப்பதிவு எந்திரங்கள் (பேலட் யூனிட்), 5 ஆயிரத்து 727 கட்டுப்பாட்டு கருவிகள் (கண்ட்ரோல் யூனிட்) மற்றும் 6 ஆயிரத்து 170 வாக்காளர் தான் அளித்த வாக்கை சரிபார்க்கும் கருவி (விவிபேட்) ஆகியவைகள் முதல்நிலை சரிபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 
இதில், 32 வாக்குப்பதிவு எந்திரங்களும், 248 கட்டுப்பாட்டு கருவிகளும், 200 வாக்காளர் தான் அளித்த வாக்கை சரிபார்க்கும் கருவிகளும் பழுதடைந்துள்ளது கண்டறியப்பட்டு அவைகள் போலீஸ் பாதுகாப்புடன் பெங்களூரு பாரத் மின்னணு நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) தியாகராஜன் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்