பேத்திக்கு பாலியல் தொல்லை; முதியவர் போக்சோவில் கைது
கோவையில் பேத்திக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தை சேர்ந்த 32 வயது பெண்ணுக்கும், கோவை ஒண்டிபுதூரை சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் முடிந்து 2 பெண் குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் தனித்தனியாக வசித்து வருகின்றனர்.
அந்த பெண் தனது 2 குழந்தைகளையும் மாமனார், மாமியார் பராமரிப்பில் விட்டிருந்தார். இந்த நிலையில் அந்த குழந்தைகளில் 10 வயது சிறுமிக்கு சொந்த தாத்தாவான சுப்பிரமணியன் (வயது 72) பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.
இதுகுறித்து அந்த சிறுமியின் தாய் மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சுப்பிரமணியனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.