நாறும்பூநாதர், ராமலிங்க சுவாமி கோவில் தேரோட்டம்

திருப்புடைமருதூர் நாறும்பூநாதர், பணகுடி ராமலிங்க சுவாமி கோவில் தை தேரோட்டம் நடந்தது.

Update: 2021-01-28 02:44 GMT
பணகுடி:
திருப்புடைமருதூர் நாறும்பூநாதர், பணகுடி ராமலிங்க சுவாமி கோவில்களில் தைத்திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
ராமலிங்க சுவாமி
நெல்லை மாவட்டம் பணகுடியில் உள்ள ராமலிங்க சுவாமி- சிவகாமி அம்பாள், நம்பி சிங்கபெருமாள் கோவில் தைத்திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவானது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமுதாயத்தினர் சார்பில் நடைபெற்றது. 
9-ம் நாளான நேற்று காலையில் தேரோட்டம் நடந்தது. தேரோட்டத்தை ராதாபுரம் தாசில்தார் கனகராஜ், கோவில் செயல் அலுவலர் சுபாஷினி, வள்ளியூர் துணை போலீஸ் சூப்பிரண்டு உதயசூரியன், பணகுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது, சமுதாய தலைவர்கள் சுந்தரம், மாணிக்கராஜ், சுந்தரராஜ், சுடலையாண்டி, நட்ராஜ், பரமசிவன், சிவகுமார், வியாபாரிகள் சங்க தலைவர் விசுவநாதன் ஆகியோர் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர். ்தேர் நான்கு ரத வீதிகளையும் சுற்றி வலம் வந்து, நிைலயை அடைந்தது. பக்தர்களுக்கு தன்னார்வலர்கள் சார்பில் பழ ஜூஸ், மதிய உணவு வழங்கப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று (வியாழக்கிழமை) இரவில் தெப்ப உற்சவம் நடக்கின்றது.
நாறும்பூநாதர் சுவாமி கோவில்
இதேபோல் வீரவநல்லூர் அருகே திருப்புபடைமருதூரில் உள்ள கோமதி அம்பாள் உடனுறை நாறும்பூநாத சுவாமி கோவிலில் தைத்திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி-அம்பாள் எழுந்தருளி வீதிஉலா வருதல் நடந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி-அம்பாள் எழுந்தருளினார்கள். பின்னர் திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். தேரானது நான்கு ரத வீதிகளையும் சுற்றி நிலையை வந்து அடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. மாலையில் புஷ்ப பல்லக்கில் சுவாமி-அம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இன்று (வியாழக்கிழமை) மதியம் தீர்த்தவாரி நடக்கிறது.

மேலும் செய்திகள்