சேலத்தில் தாய்-மகனை கத்தியால் வெட்டிய முதியவர் கைது
சேலத்தில் தாய், மகனை கத்தியால் வெட்டிய முதியவரை போலீசார் கைது செய்தனர்.
சேலம்,
சேலம் நெத்திமேடு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 63). கட்டிட மேஸ்திரி. அதே பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மனைவி வனிதா (45). கட்டிட ெதாழிலாளியாக வேலை செய்து வருகிறார்.
சுப்பிரமணி, வனிதா ஆகிய 2 பேரும் ஒரே இடத்தில் வேலை பார்த்து உள்ளனர். அப்போது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது.
இந்த தகவல் பாஸ்கருக்கு தெரிய வந்ததால் மனைவியை கண்டித்தார். இதையடுத்து வனிதா, சுப்பிரமணியிடம் பேசுவதை தவிர்த்து உள்ளார். ஆனால் சுப்பிரமணி, வனிதாவை செல்போனில் தொடர்பு கொண்டு அடிக்கடி தொந்தரவு செய்து உள்ளார்.
முதியவர் கைது
இந்த நிலையில் சுப்பிரமணி நேற்று நெத்திமேடு பகுதியில் இருந்தார். அப்போது வனிதா மற்றும் அவரது மகன் அருண் ஆகியோர் அங்கு வந்தனர். இதை பார்த்த சுப்பிரமணி, வனிதாவிடம் தகராறு செய்தார். இதை அருண் தட்டி கேட்டு உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சுப்பிரமணி தான் மறைத்து வைத்து இருந்த கத்தியால் அருணின் 2 கைகளிலும் வெட்டினார். இதை தடுத்த வனிதாவின் கையிலும் வெட்டினார்.
இதில் இருவரும் காயம் அடைந்தனர். இதையொட்டி அங்கிருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து முதியவர் சுப்பிரமணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.