பெரம்பலூர் அருகே வீட்டில் விபசாரம்; பெண் உள்பட 4 பேர் கைது
பெரம்பலூர் அருகே வீட்டில் விபசாரம் நடந்தது தொடா்பாக பெண் உள்பட 4 பேரை போலீசாா் கைது செய்தனா்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் கிரீன் சிட்டியில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் பெரம்பலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு சரவணன் தலைமையில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் மனோஜ், போலீசார் ஆறுமுகம், லட்சுமணன் ஆகியோர் அந்த பகுதியில் நேற்று மதியம் ரோந்து சென்றனர்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த சுகுமார் மனைவி ராணி (வயது 40) என்பவர், தனது வீட்டில் காமராஜ் (55), துறைமங்கலம் பகுதியை சேர்ந்த நல்லப்பன் (40), இரூரை சேர்ந்த தெய்வசெல்வம் (39) ஆகியோர் உதவியுடன் வெளிமாவட்டங்களை சேர்ந்த 2 பெண்களை கடந்த சில மாதங்களாக விபசாரத்தில் ஈடுபடுத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து ராணி, காமராஜ், நல்லப்பன், தெய்வசெல்வம் ஆகிய 4 பேரை கைது செய்த போலீசார், விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 2 பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.