அரியலூர் ரெயில் நிலையத்தில் புதிய கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றப்படவில்லை

அரியலூர் ரெயில் நிலையத்தில் உள்ள புதிய கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றப்படவில்லை.

Update: 2021-01-26 19:33 GMT
அரியலூா்,

திருச்சி ரெயில்வே ஜங்ஷனில் பல அடி உயர கம்பத்தில் தேசியக்கொடி பறக்கும். அதேபோல் அரியலூர் ரெயில் நிலையத்திலும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தேசிய கொடியேற்றுவதற்காக உயரமான கொடிக்கம்பம் அமைக்கப்பட்டது. 

குடியரசு தினமான நேற்று அந்த கொடிக்கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றுவதை பார்க்கலாம் என்று அந்தப்பகுதியில் பொதுமக்கள் ஆவலுடன் காத்திருந்தனர். 

ஆனால் ரெயில் நிலையத்தின் நுழைவு வாயிலில் வழக்கம்போல் சிறிய கொடிக்கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு, இனிப்புகள் வழங்கப்பட்டது. புதிய கொடிக்கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றப்படவில்லை. இதற்கான காரணம் என்ன? என்பது தெரியவில்லை என்று கூறியவாறே பொதுமக்கள் அங்கிருந்து சென்றனர்.

மேலும் செய்திகள்