பென்னாகரம் அருகே பிளஸ்-2 மாணவி கடத்தல்; வாலிபர் மீது புகார்
பிளஸ்-2 மாணவி கடத்தல்
பென்னாகரம்:
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி பென்னாகரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இந்த மாணவியை கடந்த 23-ந்தேதி அதே பகுதியை சேர்ந்த செல்லக்கண்ணு (வயது 24) கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் பென்னாகரம் அனைத்து மகளிர் போலீசில் வாலிபர் மீது புகார் செய்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.