தர்மபுரி அருகே பழங்கால நடுகற்கள் கண்டுபிடிப்பு

தர்மபுரி அரசு கலைக்கல்லூரியை சேர்ந்த வரலாற்று துறை மாணவர்கள் தர்மபுரி அருகே குரும்பட்டியில் கள ஆய்வு மேற்கொண்டனர்

Update: 2021-01-24 22:53 GMT
அப்போது அந்த பகுதியில் பழங்குடி மக்கள் வழிபட்ட பழமை வாய்ந்த நடுகற்கள் கண்டறியப்பட்டன. இந்த நடுகற்களில் உள்ள உருவங்கள் தர்மபுரி சுற்றுவட்டார பகுதிகளில் இதுவரை கண்டறியப்பட்ட நடுகற்களில் இருந்து வித்தியாசமானதாக அமைந்துள்ளது. இதுதொடர்பாக வரலாற்றுத்துறை பேராசிரியர் சந்திரசேகர் கூறுகையில், தற்போது கண்டறியப்பட்ட நடுகற்கள் உள்ள பகுதி காட்டுக்கோவில் என அழைக்கப்படுகிறது. பழங்கால மக்கள் தங்களது மூதாதையர்களையும், அவர்களது பண்பாட்டையும், கலாசாரத்தையும் நடுகற்கள் ஆக செதுக்கி வைப்பதன் மூலமாக அடுத்தடுத்த தலைமுறைக்கு தங்களுடைய வரலாற்றையும், பண்பாட்டு நிகழ்வுகளையும் ஆவணப்படுத்தியுள்ளனர். பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய இந்த நடுகற்கள் குருமன்ஸ் மக்களின் பழங்கால வாழ்க்கை முறையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இதுதொடர்பாக விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.

மேலும் செய்திகள்