வத்திராயிருப்பு பகுதியில் விவசாய பணி மும்முரம்
வத்திராயிருப்பு பகுதியில் விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர்ந்து மழை பெய்தது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த மழை காரணமாகவும், தொடர்ந்து மழை பெய்ததாலும் வத்திராயிருப்பு பகுதியில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி உள்ளன.
இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் நாற்று பாவும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். ஒருபுறத்தில் அறுவடை பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
வத்திராயிருப்பு பகுதியில் தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக நீர்நிலைகள் நிரம்பி உள்ளன. இதனால் ஒரு புறம் அறுவடை பணிகள், ஒரு புறம் நாற்று பாவும் பணி என விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. விவசாயத்திற்கு போதுமான தண்ணீர் கிணறுகளிலும் உள்ளதால் வத்திராயிருப்பில் இருந்து கூமாப்பட்டி செல்லும் சாலை பகுதியிலும் விவசாய பணிகள் நடைபெற்று வருகின்றன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.