சாலையின் குறுக்கே முறிந்து விழுந்த பழைமை வாய்ந்த புளியமரம்
சாலையின் குறுக்கே முறிந்து விழுந்த பழைமை வாய்ந்த புளியமரம் விழுந்தது
நொய்யல்:
கரூர் மாவட்டம், நொய்யல் அருகே தவுட்டுப்பாளையத்தில் இருந்து நஞ்சை புகளூர் செல்லும் சாலையில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி அருகே சுமார் 200 ஆண்டுகள் பழைமை வாய்ந்த புளியமரம் ஒன்று இருந்தது. இந்த மரத்தின் வேர்கள் வலுவிழந்து இருந்தன. இதனால் நேற்று முன்தினம் இரவு திடீரென புளியமரம் முறிந்து அதன் அருகே உள்ள மின்கம்பத்தின் மீது விழுந்தது. இதனால் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் வந்து பார்த்தனர். மரம் விழுந்ததால் மின்கம்பிகள் அறுந்தும், மின்கம்பம் முறிந்தும் கிடந்தது. இதுகுறித்து உடனடியாக மின்சாரத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்த உடனடியாக அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து புளியமரம் மற்றும் மின்கம்பத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.