அபயபிரதான ரெங்கநாதர் கோவிலில் கும்பாபிஷேகம்

அபயபிரதான ரெங்கநாதர் கோவிலில் கும்பாபிஷேகம் முதல் கால பூஜையுடன் தொடங்கியது

Update: 2021-01-23 22:00 GMT
அபயபிரதான ரெங்கநாதர் கோவிலில் கும்பாபிஷேகம் முதல் கால பூஜையுடன் தொடங்கியது
கரூர்:

கரூரில் பழமை வாய்ந்த அபயபிரதான ரெங்கநாதர் கோவிலில் நாளை (திங்கட்கிழமை) கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனையொட்டி கோவிலில் பழமை மாறாமல் திருப்பணிகள் நடைபெற்றது. கடந்த 21-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு சுதர்சன ஹோமம், பஞ்ச சூக்த ஹோமம் நடந்தது. நேற்றுமுன்தினம் காலை மகாலெட்சுமி ஹோமம், கோ-பூஜை, பகவத் பிரார்த்தனை, முளைபாரி இடுதல், வாஸ்து ஹோமம் ஆகியவை நடந்தது. நேற்று காலை 8.30 மணிக்கு காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. மாலை 5.30 மணியளவில் ஆச்சாரியாள் அழைப்பு, புன்யாஹவாஜனம், அக்னிமதனம், ரக்ஷாபந்தனம், கங்கணம் கட்டுதல் நடைபெற்றது. தொடர்ந்து இரவு 7 மணிக்கு யாகசாலை பிரவேசம், கலாகர்ஷனம், கோபுர கலசங்கள் வைக்கப்பட்டது. தொடர்ந்து கும்பாபிஷேகம் முதல்கால பூஜையுடன் தொடங்கியது. அப்போது, சுவாமிக்கு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை விஸ்வரூபம் புன்யாஹவாஜனம், மகா சாந்தி ஹோமம், யத்திரஸ்தாபனம் அஷ்டபந்தனம் சாற்றுதல் நடைபெறும். தொடர்ந்து 2-ம் காலபூஜையும், இரவு 10 மணிக்கு 3-ம் காலபூஜையும் நடைபெறுகிறது.

மேலும் செய்திகள்