நடைபாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி போராட்டம்

டி.கல்லுப்பட்டி அருகே நடைபாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-01-23 15:49 GMT
பேரையூர்,

டி.கல்லுப்பட்டி அருகே எஸ்.நரிக்குடி சுப்புலாபுரம் தெற்கு காலனி பகுதியில் 60-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அந்த பகுதியில் உள்ள நடைபாதையில் ஆக்கிரமிப்பு உள்ளது. அதனால் பாதையில் செல்ல முடியாத நிலை உள்ளது.

இதுகுறித்து தாலுகா நிர்வாகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிராம மக்கள் பலமுறை கோரிக்கை மனு கொடுத்தும் ஆக்கிரமிப்பை அகற்றாத நிலையில் இருந்துவந்தது.

இந்தநிலையில் நேற்று இந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் பேரையூர் தாலுகா அலுவலகம் முன்பு திரண்டு நடவடிக்கை எடுக்கக்கோரி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேரையூர் துணை தாசில்தாரிடம் மனு கொடுத்தனர். அப்போது விரைந்து நடவடிக்கை எடுப்பதாக துணைதாசில்தார் கூறியதை அடுத்து அங்கிருந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்