குடியாத்தம் அருகே ரெயிலில் அடிபட்டு தொழிலாளி பலி
குடியாத்தம் அருகே ரெயிலில் அடிபட்டு கூலித்தொழிலாளி பலியானார்.
ஜோலார்பேட்டை,
குடியாத்தத்ைத அடுத்த மேல்பட்டி -வளத்தூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். இது குறித்து தகவறிந்த ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து நடத்திய விசாரணையில் இறந்தவர் வளத்தூரை அடுத்த கன்னிகா சமுத்திரம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி காளி (வயது 51) என்பதும், நேற்று காலை தண்டவாளத்தை கடந்தபோது ரெயிலில் அடிபட்டு இறந்ததும் தெரிய வந்தது. இது குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.