ஓசூரில் சாலை பாதுகாப்பு மாத விழா: எமதர்மன், சித்ரகுப்தன் வேடமணிந்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு
ஓசூரில் வட்டார போக்குவரத்து துறை சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா ஓசூர் பஸ் நிலையத்தில் நடைபெற்றது. வேலூர் துணை போக்குவரத்து ஆணையர் சுரேஷ் தலைமை தாங்கினார்.
ஓசூர் வட்டார போக்குவரத்து அலுவலர் ஈஸ்வரமூர்த்தி முன்னிலை வகித்தார். விழாவில் விபத்துகளை தடுக்க எமதர்மராஜா, சித்ரகுப்தர் போல் வேடமணிந்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அப்போது பொதுமக்கள் வட்டார போக்குவரத்து துறை மூலம் அமல்படுத்தப்படும் சாலை விதிகளை பின்பற்றுகிறார்களா? என்று எமனும், சித்ரகுப்தனும் வசனங்கள் பேசி நாடகத்தின் மூலமாக பொதுமக்களுக்கு தெரிவித்தனர். இதில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் விஜயகுமார், தரணிதர் மற்றும் வாகன டிரைவர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.