ஆரணி பகுதியில் 1,299 மாணவ - மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் - அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வழங்கினார்

ஆரணி பகுதியில் 1,299 மாணவ - மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிளை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வழங்கினார்.

Update: 2021-01-22 10:41 GMT
ஆரணி,

ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 பயிலும் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடைபெற்றது. பள்ளி தாளாளர் சத்தியமூர்த்தி, மாவட்ட கவுன்சிலர்கள் அ.கோவிந்தராசன், பூங்கொடி திருமால், அரசு வழக்கறிஞர் கே.சங்கர், ஆவின் துணைத்தலைவர் பாரி பி.பாபு, மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு பண்டக சாலை தலைவர் ஜி.வி.கஜேந்திரன், வைகை கூட்டுறவு பண்டகசாலை தலைவர் பி.ஆர்.ஜி.சேகர், துணைத்தலைவர் குமரன், ஒன்றிய கவுன்சிலர் அரையாளம் எம்.வேலு, நகர கூட்டுறவு வங்கி தலைவர் அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள்செல்வன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்துகொண்டு, ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப்பள்ளியில் 501 மாணவர்களுக்கும், ஆரணி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 237 மாணவர்களுக்கும், சேவூர் ஊராட்சியில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 121 மாணவர்களுக்கும், அக்ராப்பாளையம், முள்ளண்டிரம் மற்றும் இரும்பேடு, எஸ்.வி.நகரம், குண்ணத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் என மொத்தம் 1,299 பேருக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார்.

விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.எம்.பாபுமுருகவேல், பள்ளி தலைமை ஆசிரியர்கள் மகேஸ்வரி, மீனாட்சி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சேவூர் ஜெ.சம்பத், சேவூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர்கள் கே.பெருமாள், வி.வெங்கடேசன், சேவூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ஏ.கே.குமரவேல், இரும்பேடு ஊராட்சி மன்ற தலைவர் தரணிவெங்கட்ராமன், ஒன்றிய கவுன்சிலர்கள் கவிதாபாபு, ஜெயப்பிரகாஷ், கவுரி பூங்காவனம், ஆரணி நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) டி. ராஜவிஜயகாமராஜ், தமிழ்நாடு கூட்டுறவு இணையத்தின் இயக்குனர் கலைவாணி உள்பட அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் ஆரணி மாவட்ட கல்வி அலுவலர் த.சம்பத் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்