பெரம்பலூாில் நாய்கள் கடித்து குதறியதில் மான் சாவு
பெரம்பலூாில் நாய்கள் கடித்து குதறியதில் மான் செத்தது.
பெரம்பலூர்;
பெரம்பலூர் மாவட்ட வனப்பகுதிகளில் சரியாக இரை, தண்ணீர் கிடைக்காததால், அவ்வப்போது மான்கள் இரை, தண்ணீர் தேடி ஊருக்குள் வருவது வழக்கம். அதேபோல் குடியிருப்பு பகுதிக்குள் வந்த, சுமார் 3 வயதுடைய பெண் மான் ஒன்று நேற்று பெரம்பலூர் கலெக்டர் அலுவலக சாலையில் நின்றது. அப்போது அங்கு சுற்றித்திரிந்து கொண்டிருந்த நாய்கள் அந்த மானை தூரத்திச்சென்று கடித்து குதறின. இதனை கண்ட அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வீரர்கள் நாயை விரட்டி விட்டு, படுகாயமடைந்த மானை மீட்டு பெரம்பலூர் வனத்துறையிடம் ஒப்படைத்தனர். அவர்கள் மானை சிகிச்சைக்காக பெரம்பலூர் கால்நடைத்துறை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மான் பரிதாபமாக செத்தது. இதையடுத்து மானை வனத்துறையினர் சித்தளி வனப்பகுதிக்கு கொண்டு சென்று அடக்கம் செய்தனர்.