வாகனம் மோதி கிராம நிர்வாக உதவியாளர் சாவு

தூசி அருேக வாகனம் மோதி கிராம நிர்வாக உதவியாளர் பலியானார்.

Update: 2021-01-20 14:13 GMT
தூசி

தூசி அருகே உள்ள சோழவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அமரேசன் (வயது 54), கீழ்நெல்லி கிராமத்தில் கிராம நிர்வாக உதவியாளராக வேலை பார்த்து வந்தார். 

இவர், சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் காஞ்சீபுரம்-செய்யாறு சாலையில் மாங்கால் கூட்டுரோடு அருகே சென்று கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத வாகனம் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. 

இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்து தூசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்