கிராம பஞ்சாயத்து தேர்தலில் எங்கள் வேட்பாளர்கள் 70 பேர் வெற்றி; ஆம் ஆத்மி அறிக்கை

மராட்டியத்தில் கடந்த 15-ந் தேதி நடந்த கிராம பஞ்சாயத்து தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது.

Update: 2021-01-19 20:33 GMT

மராட்டியத்தில் கடந்த 15-ந் தேதி நடந்த கிராம பஞ்சாயத்து தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. 

இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஆம் ஆத்மியை சேர்ந்த சுமார் 300 வேட்பாளர்கள் கிராம பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டனர். லாத்தூர், நாக்பூர், சோலாப்பூர், நாசிக், கோண்டியா, சநதிராப்பூர், பால்கர், ஹிங்கோலி, அகமத்நகர், ஜல்னா, யமத்வால், பண்டாரா ஆகிய மாவட்டங்களில் போட்யிட்ட சுமார் 70 வேட்பாளர்கள் வெற்றி கண்டுள்ளனர். இது மராட்டியத்தில் எங்கள் கட்சிக்கு கிடைத்த வெற்றி. வாக்காளர்களுக்கு நன்றி.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்