கல்பாக்கம் அருகே புலவர் நத்தத்தனார் நினைவு இல்லம் அமைக்க நடவடிக்கை அமைச்சர் பாண்டியராஜன் பேச்சு

செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியத்துக்குட்பட்ட வழுவதூர் பகுதியில் தமிழக அரசின் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா நடைபெற்றது.

Update: 2021-01-19 20:45 GMT
அமைச்சர் பாண்டியராஜன்

இதற்கு அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் எஸ்வந்த் ராவ், நிர்வாகிகள் விவேகானந்தன், அரிதாஸ், தினேஷ் குமார், ரத்தினம், ரவிகுமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்து அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்தார். பின்னர் அந்த பகுதியை சேர்ந்த கர்ப்பிணிபெண்களுக்கு ஊட்டச்சத்து பொருட்களை அமைச்சர் வழங்கினார். பின்னர் கல்பாக்கம் அடுத்த முதலியார்குப்பம் கிராமத்திலும் மினி கிளினிக்கை திறந்து வைத்து அங்குள்ள புலவர் நல்லூர் நத்தத்தனார் நினைவுத்தூணை பார்வையிட்டார்.

அமைச்சர் பாண்டியராஜன் பேசும் போது:-

இங்குதான் சிறுபாணாற்றுப்படை நூலை எழுதிய பழங்கால புலவர் நத்தத்தனார் பிறந்துள்ளார். இந்த கிராமத்தில் அவருக்கு நினைவு இில்லம் அமைக்க இந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கையை தமிழக முதல் -அமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று நினைவு இல்லம் அமைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்