தஞ்சையில் 5 இடங்களில் கொரோனா விழிப்புணர்வு தெருமுனை நாடகம்
தஞ்சையில் 5 இடங்களில் கொரோனா விழிப்புணர்வு தெருமுனை நாடகம் நடைபெற்றது.
தஞ்சாவூர்,
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவுவது குறைந்து வந்தாலும் இன்னும் மக்களிடம் அச்சம் உள்ளது. இதையடுத்து கொரோனா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், ஊர்வலம் போன்றவை அரசு மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் தஞ்சை மாவட்டத்தில் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி தஞ்சை மண்டல மருந்து கட்டுப்பாட்டுத்துறை மற்றும் தஞ்சை மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் கொரோனா விழிப்புணர்வு தெருமுனை நாடகம் தஞ்சையில் நேற்று நடைபெற்றது. தஞ்சை ரெயில் நிலையம், ராமநாதன் பஸ் நிறுத்தம், புதிய பஸ் நிலையம், திலகர் திடல், கீழவாசல் காமராஜர் சிலை அருகே ஆகிய 5 இடங்களில் நடைபெற்றது.
விழிப்புணர்வு நாடகம்
இந்த நிகழ்ச்சிக்கு தஞ்சை மாவட்ட மருந்து வணிகர் சங்க செயலாளர் சோலைசிவம் தலைமை தாங்கினார். பொருளாளர் ராதாகிருஷ்ணன், சட்ட ஆலோசகர் வக்கீல் சந்திரபோஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாடகத்தை மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி முகமதுகமால் தொடங்கி வைத்தார்.
இதில் திரைப்பட நடிகர் ஜெயபால் மற்றும் தஞ்சை டவுன் கரம்பையை சேர்ந்த பழனிசாமி குழுவினர் இணைந்து விழிப்புணர்வு நாடகத்தை நடத்தினர். நாடகத்தின் மூலம் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். வெளியில் சென்று வீட்டிற்கு வரும் போது கை, கால்களை கழுவ வேண்டும். காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில் மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர் தனபால், மருந்து வணிகர் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.