திருச்சி புத்தூரில் குழுமாயி அம்மன் கோவில் உண்டியலை பெயர்த்து தூக்கி சென்ற கொள்ளையர்கள் 4 பேர் கொண்ட கும்பலுக்கு வலைவீச்சு
திருச்சி புத்தூர் குழுமாயிஅம்மன் கோவிலில் உள்ள உண்டியலை பெயர்த்து கொள்ளையர்கள் தூக்கி சென்றனர். கண்காணிப்பு கேமராவில் பதிவான 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருச்சி,
திருச்சி புத்தூரில் உள்ள உய்யகொண்டான் வாய்க்கால், கோரையாறு சந்திக்கும் இடத்தில் குழுமாயி அம்மன் கோவில் உள்ளது. இங்கு நடைபெறும் குட்டிக்குடி திருவிழா பிரசித்திபெற்றதாகும். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.
இக்கோவிலில் நேற்று முன்தினம் வழக்கம்போல் பூஜை முடிந்த பின்னர் பூசாரி பன்னீர்செல்வம் கோவிலை பூட்டி விட்டு மாலை 6 மணிக்கு சென்றுவிட்டார். பின்னர் நேற்று காலை 8 மணியளவில் வந்து பார்த்த போது கோவிலின் கிரில்கேட் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கருவரை அருகே இருந்த உண்டியலை மர்ம நபர்கள் கடப்பாறையால் பெயர்த்து தூக்கி சென்றது தெரியவந்தது. உடனே பூசாரி கோவில் அறங்காவலர் புனிதாவுக்கு தகவல் கொடுத்தார்.
மர்மகும்பலுக்கு வலைவீச்சு
இது குறித்து புனிதா திருச்சி அரசு மருத்துவமனை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் அங்கு விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைத்து தடையங்களை சேகரித்தனர். மேலும் அங்குள்ள கண்கானிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் 4 பேர் கொண்ட மர்ம கும்பல் உண்டியலை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. போலீசார் அவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.