திருவரங்குளம் அருகே குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

திருவரங்குளம் அருகே குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-01-08 01:04 GMT
திருவரங்குளம்,

திருவரங்குளம் அருகே உள்ள கொத்தக்கோட்டை ஊராட்சியை சேர்ந்த அம்மையபுரம் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால் இப்பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைத்து மின்மோட்டார் மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதன் காரணமாக ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்றது. ஆனால், என்ன காரணமோ தெரியவில்லை, அப்பணி திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த கொத்தக்கோட்டை கிராமமக்கள் தெட்சிணாபுரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சு வார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த ஊராட்சி நிர்வாகத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் வாக்குறுதி அளித்ததன் பேரில் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

இந்த மறியல் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்