மோட்டார்சைக்கிளுடன் கீழே விழுந்தபோது லாரி சக்கரத்தில் சிக்கி கறிக்கடை ஊழியர் பலி

மோட்டார்சைக்கிளுடன் கீழே விழுந்தபோது லாரி சக்கரத்தில் சிக்கி கறிக்கடை ஊழியர் பலி

Update: 2021-01-07 11:04 GMT
வாலாஜா, 

வாலாஜா வெற்றிலைக்காரத் தெருவைச் சேர்ந்தவர் பிலால் (வயது 33). இவர், வாலாஜா தினசரி மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு சிக்கன் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர், நேற்று மாலை 6 மணியளவில் வேலை முடிந்ததும் ராணிப்பேட்டையை நோக்கி தனது மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

வாலாஜா அரசு மருத்துவமனை அருகில் சென்றபோது, ஓடும் மோட்டார்சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்து விட்டார். கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த வழியாக வந்த ஒரு லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பிலால் நசுங்கி பலியானார். விபத்து குறித்து வாலாஜா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்