திருவாரூர் மாவட்டத்தில் தொடர் மழை; நெற்பயிர்கள் சாய்ந்தன சாலைகளில் தேங்கிய மழைநீரால் மக்கள் அவதி
திருவாரூர் மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் நெற்பயிர்கள் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
திருவாரூர்,
தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவ மழை தொடங்கியது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் கடலோர மாவட்டங்களில் 4 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் மழை பரவலாக பெய்ய தொடங்கியது.
நேற்று மதியம் வரை கன மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மழையால் பல இடங்களில் சாலைகள் பழுதடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது.
மக்கள் கூட்டம் இல்லாததால் சாலையோர கடைகள் விற்பனை முடங்கியது. கட்டுமான பணிகள் உள்பட அனைத்து பணிகளும் தேக்கம் அடைந்தது. இதனால் தொழிலாளர்கள் வருமான இழப்பை சந்தித்தனர். நெற்பயிர்கள் சாய்ந்தன
நன்னிலம் பகுதியில் கடந்த 3 நாட்களாக விட்டுவிட்டு தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் நன்னிலம் பகுதிகளில் சம்பா நெற்பயிர்களில் நெல் மணிகள் முற்றாத நிலையில் உள்ள நெற்பயிர்கள் வயலில் சாய்ந்து உள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். நன்னிலம் வேளாண்மை கோட்டத்தில் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எக்டேரில் சம்பா நெல் சாகுபடி செய்துள்ளனர். இந்த நெற்பயிர்கள் தொடர் மழையின் காரணமாக வயல்களில் முழுவதுமாக சாய்ந்து உள்ளன. எனவே மகசூல் பெருமளவு பாதிக்கும் என்பதால் விவசாயிகள் கவலை தெரிவித்து உள்ளனர்.
கொரடாச்சேரி
கொரடாச்சேரி ஒன்றியத்தில் கொரடாச்சேரி, அம்மையப்பன், காவனூர், தைக்கால் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. இதனால் ஒன்றியத்தின் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியது. சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீரால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டனர். தாழ்வான பகுதிகளிலும் சாலைகளில் ஏற்பட்ட பள்ளங்களிலும் மழைநீர் தேங்கி போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டது. கொரடாச்சேரி பகுதியில் தற்போது நெற்பயிரில் கதிர்கள் முற்றி வரும் நிலையில் உள்ளது.
இந்த பயிர்கள் தற்போதைய மழையால் சாய்ந்துள்ளன. கதிர் முற்றிய நிலையில் பயிர்கள், மழையால் கூடுதல் எடை அதிகரித்து தரையில் சாய்ந்தன. சில இடங்களில் பயிர்கள் தண்ணீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டது. கொரடாச்ேசரி ஒன்றியத்தில் 2 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்து உள்ளதால் விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர்.
நிவாரணம்
பல இடங்களில் விவசாயிகள் தண்ணீரை வடிய வைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். இருப்பினும் தண்ணீரில் சாய்ந்த பயிர்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்க இயலாது. ஏற்கனவே நிவர் மற்றும் புெரவி புயலால் பாதிக்கப்பட்ட பயிர்கள் வேளாண்மைத் துறையினரால் கணக்கெடுக்கப்பட்டது. இந்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போதைய மழையால் மேலும் கூடுதலாக நெற்பயிர்கள் சாய்ந்துள்ளன. எனவே நிவாரணத்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மன்னார்குடி
மன்னார்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான பரவாக்கோட்டை, உள்ளிக்கோட்டை, பைங்காநாடு உள்ளிட்ட பகுதிகளில் நேற்றும் மதியம் சுமார் 2 மணிநேரம் பலத்த மழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. மன்னார்குடி கடைத்தெருவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கடைத்தெருக்களில் நடைபாதை வியாபாரிகள் அவதிக்குள்ளாகினர். மழையால் சாலைகளில் நீர்பெருக்கெடுத்து ஓடியது. வழக்கமாக மார்கழி மாதத்தில் பனிப்பொழிவு இருக்கும் மழை பெய்யாது. ஆனால் இந்த வருடம் மார்கழி மாதமான தற்போது நல்ல மழைபெய்து வருகிறது. இந்த மழை தொடர்ந்தால் நெற்பயிர்கள் முற்றிலும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
குடவாசல்
குடவாசலில் நேற்று பெய்த கன மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. குடவாசல் கடைத்தெருவில் பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் குடவாசல் பஸ் நிலையத்தில் நீண்ட நேரம் தங்கி இருக்கும் சூழ்நிலை நிலவியது. குடவாசல் பேரூராட்சி பகுதியில் உள்ள பள்ளிவாசல், மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கிய நிலையில் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
கூத்தாநல்லூர்
கூத்தாநல்லூர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் விட்டு விட்டு விடிய விடிய மழை பெய்தது. நேற்று காலையும் தொடர்ந்த மழை, பலமணி நேரம் பலத்த மழையாக பெய்தது. கூத்தாநல்லூர், லெட்சுமாங்குடி, ஓவர்ச்சேரி, பொதக்குடி, பூதமங்கலம், பூந்தாழங்குடி, புனவாசல், கிளியனூர், மரக்கடை, கோரையாறு, அதங்குடி, வேளுக்குடி, சித்தனங்குடி, கோம்பூர், நாகங்குடி, பழையனூர், சாத்தனூர், வடகட்டளை, கானூர், மங்களாபுரம், வடபாதிமங்கலம், ராமநாதபுரம், திருராமேஸ்வரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இரவு பகலாக பலத்த மழை பெய்தது. இதனால், சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும், விளை நிலங்களிலும் மழை நீர் தேங்கி நின்றது.