கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு எம்.ஆர்.பி. செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2021-01-07 01:22 GMT
கரூர்,

பணி நிரந்தரப்படுத்தப்படாமல் உள்ள அனைவருக்கும் கால முறை ஊதியம் உடனடியாக வழங்கி பணி நிரந்தரம் செய்ய வேண்டும். சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். நிரந்தர ஊழியர்களுக்கு கிடைக்கும் அனைத்து சலுகைகளும் எம்.ஆர்.பி. செவிலியர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு எம்.ஆர்.பி. செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். வருவாய்த் துறை மாநில செயலாளர் அன்பழகன், ஆய்வக நுட்புனர் செல்வராணி, மருந்தாளுனர் சங்க செயலாளர் இளங்கோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்