20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தினர் ஆர்ப்பாட்டம்

20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் தாலுகா அலுவலகம் முன்பு நேற்று கரூர் மாவட்ட தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2021-01-07 01:18 GMT
கரூர்,

தமிழகத்தில் சாதாரண நிலை, இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். வயது உச்ச வரம்பின்றி ஆசிரியர் பணி நியமனங்கள் நடைபெற வேண்டும். தாய்மொழியில் கல்வி பயின்றோருக்கு தமிழக அரசு பணியிடங்களில் 80 சதவீதம் முன்னுரிமை வழங்க வேண்டும். கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும். ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் களையப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் தாலுகா அலுவலகம் முன்பு நேற்று கரூர் மாவட்ட தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மன்றத்தின் மாவட்ட தலைவர் பெர்க்மான்ஸ் தலைமை வகித்தார். மாவட்ட மூத்தோர் அணி சீதாபதி முன்னிலை வகித்தார். மாவட்டசெயலாளர் வேலுமணி வரவேற்று பேசினார். அரவக்குறிச்சி ஒன்றிய தலைவர் முத்துக்குமார் ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் குறித்து பேசினார். முடிவில் மாவட்ட பொருளாளர் தர்மலிங்கம் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்