திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் பலி

திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் பலியானார்.

Update: 2021-01-06 02:48 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே உள்ள கீழ்மணம்பேடு பகுதியை சேர்ந்தவர் கன்னியப்பன். இவரது மனைவி கஸ்தூரி (வயது 65). நேற்று முன்தினம் கஸ்தூரி தன்னுடைய வீட்டின் அருகே உள்ள கடைக்கு சென்று பால் வாங்கி கொண்டு மீண்டும் தன்னுடைய வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

அவர் கீழ்மணம்பேடு பஸ் நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தபோது அந்த வழியாக வேகமாக வந்த அடையாளம் தெரியாத மோட்டார் சைக்கிள் ஒன்று கஸ்தூரி மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

பெண் பலி

இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்த அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை பார்த்த அங்கு இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே கஸ்தூரி பரிதாபமாக இறந்து போனார்.

இது குறித்து வெள்ள வேடு போலீசார் வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்