அரியலூரில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று பெரம்பலூரில் ஒருவர் பாதிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களில் கொரோனா தொற்றால் ஒருவர் கூட பாதிக்கப்படாத நிலை இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Update: 2021-01-06 00:05 GMT
பெரம்பலூர்,

அரியலூர் மாவட்டத்தில் நேற்று அரியலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ஒருவர், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ஒருவர் மற்றும் பிற மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 3 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,642 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று 4,561 பேர் வீடு திரும்பியுள்ளனர். 48 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று 301 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களில் கொரோனா தொற்றால் ஒருவர் கூட பாதிக்கப்படாத நிலை இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 258 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 பேர் மட்டுமே சென்னை மற்றும் திருச்சி தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர்.

மேலும் செய்திகள்