மரக்காணத்தில் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம்: அ.தி.மு.க.வின் மக்களாட்சி தொடர வாக்கு சேகரியுங்கள் அமைச்சர் பேச்சு

அ.தி.மு.க.வின் மக்களாட்சி தொடர வாக்கு சேகரிக்க வேண்டும் என்று மரக்காணத்தில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார்.

Update: 2021-01-05 05:19 GMT
திண்டிவனம்,

மரக்காணம் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயல்வீரர்கள் மற்றும் செயல் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் சிறுவாடியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு விழுப்புரம் மாவட்ட செயலாளரும், மண்டல தேர்தல் பொறுப்பாளரும், சட்டத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் தலைமை தாங்கினார். மரக்காணம் மேற்கு ஒன்றிய செயலாளர் நடராஜன், மரக்காணம் பேரூராட்சி செயலாளர் கனகராஜ், ஒன்றிய மேற்கு அவைத்தலைவர் தீபம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மரக்காணம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ரவிவர்மன் வரவேற்றார்.

கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியதாவது:-

வாக்குகள் சேகரியுங்கள்

50 ஆண்டுகால அ.தி.மு.க. அரசியல் வரலாற்றில் 31 ஆண்டு காலம் அ.தி.மு.க. ஆட்சியில் இருந்துள்ளது. ஜெயலலிதா கடைசியாக கூறிய வார்த்தையை நாம் அனைவரும் நிறைவேற்றி காட்ட வேண்டும். அதாவது எனக்கு பிறகும் இந்த இயக்கம் 100 ஆண்டு காலம் இருக்கும் என்று கூறியிருந்தார்.

தி.மு.க. ஆட்சியில் உங்கள் சொத்து உங்களுக்கு சொந்தமாக இருக்காது. உங்கள் வீடும் உங்களுக்கு சொந்தமாக இருக்காது. தி.மு.க.வின் அராஜக ஆட்சி வேண்டுமா?, அ.தி.மு.க.வின் மக்களாட்சி வேண்டுமா? என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்று மக்களிடம் கூறி வாக்குகளை சேகரியுங்கள்.

நல்ல சந்தர்ப்ப சூழ்நிலை

தற்போது மக்களாட்சிக்கு நல்ல சந்தர்ப்ப சூழ்நிலை உள்ளது. எனவே மக்கள் அ.தி.மு.க.வை வெற்றி பெறச் செய்ய வேண்டும். மேலும் நிர்வாகிகள் நேரடியாக களத்தில் சென்று வாக்குகளை சேகரிக்க வேண்டும்.

இவ்வாறுஅவர் பேசினார்.

கூட்டத்தில் ஜெயலலிதா பேரவை ஒன்றிய செயலாளர் ராமலிங்கம், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை ஒன்றிய செயலாளர் ராஜா என்கிற சக்கரவர்த்தி, குன்னப்பாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் தலைவர் செல்வராஜ், மகளிர் அணி செயலாளர் கனகவல்லி, கிழக்கு ஒன்றிய பொருளாளர் ராம்குமார், ஒன்றிய துணை செயலாளர் மணிமாறன், மாணவரணி ஒன்றிய தலைவர் மாணிக்கம், மாவட்ட பிரதிநிதி முருகன், இளைஞரணி அய்யனார், மாணவரணி குமரவேல், விவசாய அணி ஆதிபகவான், இலக்கிய அணி பிரேம்குமார், ஒன்றிய இணை செயலாளர் கோமதியுவராஜா, ஒன்றிய ஜெயலிதா பேரவை தலைவர் ரீத்து நரேந்திரபிரபு, எம்.ஜி.ஆர். மன்றம் தனுசு, கிளை செயலாளர் யோகநாதன், தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் பிரசாந்த், துணை செயலாளர் குணசேகரன், கிளை செயலாளர் குப்பன், மானூர் கிளை செயலாளர் சங்கர், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் விஜயன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் மாணிக்கம், நகர எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் அன்பழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பிரதிநிதி அர்ச்சுனன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்