கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், மூங்கில்துறைப்பட்டு பகுதியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி
கள்ளக்குறிச்சி, தியாகதுருகம் மற்றும் மூங்கில்துறைப்பட்டு பகுதியில் குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் தமிழக அரசின் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன், ரூ.2,500 ரொக்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க தலைவர் பச்சையாபிள்ளை தலைமை தாங்கினார். தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை இணைய தலைவர் ராஜசேகர், முன்னாள் எம்.எல்.ஏ.அழகுவேல்பாபு, கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை துணை தலைவர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க மேலாண்மை இயக்குனர் சஞ்சீவி வரவேற்றார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பிரபு எம்.எல்.ஏ. கலந்து கொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2,500 வழங்கினார். தொடர்ந்து அவர் கள்ளக்குறிச்சி கூட்டுறவு விற்பனை சங்கம் மற்றும் ஏமப்பேர், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் தேவேந்திரன், நகராட்சி முன்னாள் தலைவர் பாலகிருஷ்ணன், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணிச் செயலாளர் செந்தில்குமார், கூட்டுறவு வாங்கி தலைவர் ரங்கன் மற்றும் நிர்வாகிகள் செல்வராஜ், ஆத்தியப்பன், தங்கபாண்டியன், வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க மேலாளர் ரவிச்சந்திரன் மற்றும் இயக்குனர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தியாகதுருகம்
தியாகதுருகம் மேற்கு ஒன்றியம் மற்றும் நகர அ.தி.மு.க. சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி தியாகதுருகம் செல்வாநகர் ரேஷன் கடையில் நடைபெற்றது. இதற்கு நகர செயலாளர் ஷியாம்சுந்தர், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜான்பாஷா, நின்னையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் குமரவேல், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர்கள் குப்புசாமி, சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரியமாம்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் அய்யப்பா தலைமை தாங்கி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ,2,500 ஆகியவற்றை வழங்கினார்.
இதில் ஒன்றிய துணை செயலாளர் ஜெயச்சந்திரன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க துணைத்தலைவர் சதாசிவம், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர்கள் பாலகிருஷ்ணன், குமார், நகர அவைத்தலைவர் அய்யம்பெருமாள், நகர முன்னாள் செயலாளர் சுப்பிரமணியன், நகர பாசறை செயலாளர் கிருஷ்ணராஜ், நகர இணைச் செயலாளர் கங்கா ஜெயபிரகாஷ், இலக்கிய அணி செயலாளர் பலராமன், தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய செயலாளர் சிவா, ஊராட்சி மன்ற முன்னாள் துணைத்தலைவர் சந்தோஷ்குமார், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க முன்னாள் இயக்குனர் மணிவண்ணன், அ.தி.மு.க. நிர்வாகிகள் வேல்நம்பி, பாலமுரளி, பூக்கடை சீனிவாசன், தனபால் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதேபோல் வடதொரசலூர், பெரியமாம்பட்டு, மேல்விழி, திம்மலை, சிறுநாகலூர், கொட்டையூர், நின்னையூர், குடியநல்லூர் ஆகிய கிராமங்களில் உள்ள ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.
மூங்கில்துறைப்பட்டு
மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள ஈருடையாம்பட்டில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2,500 வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ரிஷிவந்தியம் மத்திய ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் கதிர் தண்டபாணி மற்றும் வடக்கு ஒன்றிய செயலாளர் துரைராஜ் ஆகியோர்கலந்துகொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு மற்றும் ரூ.2,500 ஆகியவற்றை வழங்கினர். இதில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் ராமதாஸ் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.