விழுப்புரம் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி

விழுப்புரம் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2021-01-05 05:05 GMT
விழுப்புரம்,

கோலியனூர் ஒன்றியம் தென்னமாதேவி ஊராட்சிக்குட்பட்ட பூத்தமேட்டில் உள்ள ரேஷன் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ 2, 500 ரொக்கம் ஆகியவை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கோலியனூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளரும், ஆவின் தலைவருமான பேட்டை முருகன் கலந்துகொண்டு 900 குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய், முழு கரும்பு ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பையும் மற்றும் ரூ.2,500 ரொக்கத்தையும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் திருவாமாத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் ஜனார்த்தனன், துணைத்தலைவர் அப்துல்ரஹீம், ஒன்றிய இணைச்செயலாளர் கிருஷ்ணகுமாரி ஏழுமலை, மாவட்ட பிரதிநிதி அருள், மகளிர் அணி செயலாளர் இந்துமதி, கூட்டுறவு சங்க இயக்குனர்கள் மணி, தயாளன், காசிநாதன், மாரிமுத்து, குருநாதன், கிளை செயலாளர்கள் முனுசாமி, கோதண்டபாணி, சுந்தர்ராமன், செல்வம், ஆற்றலரசு, பன்னீர்செல்வம், சுதாகர், ஸ்ரீதர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

7-வது வார்டு

விழுப்புரம் நகராட்சி 7-வது வார்டுக்குட்பட்ட முத்தோப்பு பகுதியில் உள்ள ரேஷன் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ 2, 500 ரொக்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் விழுப்புரம் நகர எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளரும், மாவட்ட கூட்டுறவு அச்சக துணைத்தலைவருமான குமரன் கலந்துகொண்டு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் வார்டு செயலாளர் சேகர், நிர்வாகிகள் சந்துரு, தனுசு, விநாயகம், கணேசன், பாலாஜி, செல்வா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

5-வது வார்டு

விழுப்புரம் நகராட்சி 5-வது வார்டுக்குட்பட்ட பகுதியில் உள்ள 2 ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ 2, 500 ரொக்கம் ஆகியவை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் விழுப்புரம் நகர அ.தி.மு.க. துணைச்செயலாளரும் நகர கூட்டுறவு வங்கி இயக்குனருமான வக்கீல் செந்தில் கலந்துகொண்டு 2 கடைகளிலும் உள்ள 1, 947 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் வார்டு செயலாளர் தெய்வகருணாகரன், வார்டு பிரதிநிதி கீதாரத்தினம், நகர சிறுபான்மை பிரிவு நிர்வாகி ஹைதர்ஷெரிப், வார்டு நிர்வாகிகள் சீனு, சரவணன், பிரபு, கார்த்திக், ரேஷன் கடை விற்பனையாளர்கள் பாரதி, சண்முகவள்ளி ஆகியோர் கலந்து கொண்டனர்.

கண்டமங்கலம்

கண்டமங்கலம் ஒன்றியம் வடவாம்பலம், பஞ்சமாதேவி, மோட்சகுளம், சிறுவந்தாடு, அர்ப்பிசம்பாளையம் ஆகிய கிராமங்களில் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய துணைத்தலைவரும், கண்டமங்கலம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளருமான கே.ராமதாஸ் கலந்து கொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினார். நிகழ்ச்சியில் வடவாம்பலம் கூட்டுறவு சங்க தலைவர் சங்கர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் கலியமூர்த்தி, ராமலிங்கம், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் ஜெயராமன், கூட்டுறவு சங்க துணை தலைவர் கவுரி, நிர்வாகிகள் ஜெய்சங்கர், பாஸ்கர், கூட்டுறவு சங்க தலைவர் ராஜசேகர், மாவட்ட விவசாய அணி தலைவர் ஆறுமுகம், கிளை செயலாளர் செல்வபெருமாள், முருகையன், ராஜா, சிறுவந்தாடு கூட்டுறவு சங்க தலைவர் தண்டபாணி, மோட்சகுளம் பட்டு கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சேதுபதி, மாணவர் அணி இணை செயலாளர் முருகன், கிளை செயலாளர்கள் கஜேந்திரன், கலிவரதன், ஆதிகேசவலு, மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் வெங்கடேசன், துணை தலைவர் பிரகாஷ், ஒன்றிய விவசாய அணி செயலாளர் குமரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திண்டிவனம்

திண்டிவனம் வேளா ண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.2,500 ரொக்கம், வேட்டி-சேலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திண்டிவனம் நகர அ.தி.மு.க. செயலாளரும், திண்டிவனம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க தலைவருமான வக்கீல் தீனதயாளன் கலந்து கொண்டு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினார். கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் குருசாமி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் முகமது ஷெரீப், சங்க மேலாண்மை இயக்குனர் வீரசெல்வம், தேவநாதன், தளபதி ரவி, முன்னாள் கவுன்சிலர் வேணுகோபால், சத்தியமூர்த்தி, பன்னீர்செல்வம், அண்ணாதுரை, குப்பு ராமதாஸ், ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

செஞ்சி

செஞ்சி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் மேலாண்மை இயக்குனர் முருகன் தலைமை தாங்கினார். பொது மேலாளர் ரவி வரவேற்றார். இதில் சங்கத்தின் தலைவர் விநாயகமூர்த்தி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் கூட்டுறவு சார்பதிவாளர் சுப்பிரமணியன், துணைத் தலைவர் தேவராஜன், இயக்குனர்கள் வெங்கடேசன், சாந்தி கிருஷ்ணன். கவிதாதிருமலை, சத்யவாணி ஆறுமுகம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் அவியூர் பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மேலாளர் தேசிங்கு நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்