கலெக்டர் அலுவலகத்தில் நர்சிங் மாணவிகள் மீண்டும் போராட்டம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை
நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நர்சிங் மாணவிகள் மீண்டும் தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் இயங்கி வரும் ஒரு தனியார் பாரா மெடிக்கல் கல்லூரி அங்கீகாரம் இல்லாமல் செயல்படுவதாகவும், அடிப்படை வசதிகள் சரிவர இல்லை என்றும், தங்களது சான்றிதழ்களை கேட்டால் கல்லூரி நிர்வாகம் மிரட்டுவதாகவும் மாணவிகள் கூறுகின்றனர். மேலும் கல்லூரி விடுதியில் தங்கியிருந்த மாணவிகளுக்கு நிர்வாகி ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் புகார் கூறியுள்ளனர்.
சம்பந்தப்பட்ட கல்லூரி மற்றும் பாலியல் தொல்லை கொடுத்த கல்லூரி நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க கோரி கடந்த சில தினங்களுக்கு முன்பு மாணவிகள் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவிகளுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர்.
தர்ணா போராட்டம்
எனினும் அடுத்த நாளில் சம்பந்தப்பட்ட கல்லூரி முன் மாணவிகள் போராட்டம் நடத்தினர். மேலும் கல்லூரி நிர்வாகி மீது இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் சம்பந்தப்பட்ட நிர்வாகி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
ஆனால் வழக்கு பதிவோடு நிறுத்திவிட கூடாது என்றும், சம்பந்தப்பட்ட நபரை உடனே கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் மாணவிகள் நேற்று மதியம் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து மீண்டும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து தங்களது கோரிக்கைகளை கேட்டால் தான் கலைந்து செல்வதாக மாணவிகள் கூறினர்.
பேச்சுவார்த்தை
இதனையடுத்து மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் பிரகலாதன் மற்றும் அதிகாரிகள் அங்கு வந்து மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதிகாரிகளிடம், கல்லூரி சம்பந்தமாக பல்வேறு புகார்களை மாணவிகள் கூறினர். பின்னர் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர். அதன்பிறகு மாணவிகள் தர்ணாவை கைவிட்டு விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.