அ.தி.மு.க. கூட்டணியில் அவரவர் கட்சி சின்னங்களில் போட்டியிடுவதில் எந்த சிக்கலும் இல்லை ஜி.கே.வாசன் பேட்டி
அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் கட்சிகள் அவரவர் கட்சி சின்னங்களில் போட்டியிடுவதில் எந்த சிக்கலும் இல்லை என கும்பகோணத்தில், ஜி.கே.வாசன் கூறினார்.
கும்பகோணம்,
கும்பகோணத்தில் நடந்த தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக அரசு ஏழை, எளிய மக்களின் நலன் கருதி பொங்கல் பரிசுடன் ரூ.2 ஆயிரத்து 500 வழங்கி வருவது பாராட்டுக்குரியது. தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும் என்பது உறுதியான ஒன்று.
எந்த சிக்கலும் இல்லை
ஏழை, எளிய மக்கள் நடுத்தர மக்களுக்கு பாதுகாப்பான அரசாக அ.தி.மு.க. அரசு செயல்படுகிறது. அ.தி.மு.க. கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை இடங்கள்? எந்தெந்த தொகுதிகள்? என்பது குறித்து தகுந்த நேரத்தில் சுமூகமான முறையில் கலந்து பேசி முடிவு அறிவிக்கப்படும்.
இதுதொடர்பாக இதுவரை எந்த முடிவும் அதிகாரப்பூர்வமாக எடுக்கப்படவில்லை. அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெறும் கட்சிகளுக்கு அவரவர் சின்னங்களில் போட்டியிடுவதில் எந்த சிக்கலும் இல்லை. தி.மு.க.வில் தான் அதுபோன்ற சிக்கல்கள் உள்ளன.
மண்டல அளவிலான கூட்டங்கள்
மு.க.அழகிரி மரியாதைக்குரியவர். மதுரை தொகுதி மேம்பாட்டிற்காக பாடுபட்டவர். அவர் திடீரென கூட்டம் நடத்துவதில் ஆச்சரியமில்லை. திடீரென தி.மு.க.வினர் கிராமசபை கூட்டங்கள் நடத்தவில்லையா? அதை மக்கள் எதிர்க்கவில்லை. அதுபோலத்தான் மு.க.அழகிரியின் கூட்டமும்.
எந்த கட்சி ஆள வேண்டும் என்பதை வாக்காளர்கள்தான் தீர்மானிப்பார்கள். எந்தெந்த தொகுதியில் போட்டியிடுவது? எந்தெந்த தொகுதிகளை கூட்டணியில் கேட்டு பெறுவது என்பது குறித்து மண்டல அளவிலான கட்சி கூட்டங்களை நடத்தி முடிவு செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது மாநில இணைச்செயலாளர் சாதிக்அலி, மாவட்ட பொருளாளர் ரமேஷ், கும்பகோணம் நகர தலைவர் பி.எஸ்.சங்கர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.